Categories
உலக செய்திகள்

700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்… காவல்துறையினரின் அதிரடி… காரணம் என்ன…??

குடியிருப்பு ஒன்றில் எரிவாயு கசிவால் 700 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் உள்ள Crawly என்ற பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்த குடியிருப்பாளர்கள் நூற்றுக்கணக்கான பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். அதாவது இன்று காலையில் காவல்துறையினர் Crawly  என்ற ஒரு குறிப்பிட்ட எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியில் இருக்கும் குடியிருப்பில் எரிவாயு கசிவு ஏற்பட்ட பின்பு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. West susex தீயணைப்பு, மீட்பு சேவை மற்றும் தென்கிழக்கு கடற்கரை ஆம்புலன்ஸ் சேவை போன்றவை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனைத்தொடர்ந்து West susex கவுண்டி கவுன்ஸில், Crawly பகுதியின் கவுன்சில் மற்றும் southern Gas போன்றவை பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளது. மேலும் அப்பகுதி பாதுகாப்பாக இருக்கிறது என்று உறுதி செய்யப்பட்ட பின்னரே அங்கிருந்து வெளியேற்றப்பட்ட சுமார் 700 குடியிருப்பாளர்கள் மீண்டும் குடியிருப்புக்கு அனுமதிக்கப்படுவர். அதுவரை தற்காலிகமாக தங்குமிடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த எரிவாயு கசிந்ததால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |