Categories
தேசிய செய்திகள்

வீட்டுக்கு லேட்டா வந்த கணவர்… கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய மனைவி… கொடூர சம்பவம்…!!!

மத்திய பிரதேசத்தில் கணவர் வீட்டுக்கு லேட்டாக வந்ததால் தூங்கி கொண்டிருந்த கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் அஹிவர் (38). இவர் கூலி தொழிலாளி. அவரது மனைவி சிவகுமாரி (35). அரவிந்த் தினமும் வேலைக்குச் சென்றுவிட்டு தாமதமாக வருவதால் அவருக்கு மனைவி சிவகுமாரிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவ தினம் இரவில் லேட் ஆனதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினர் அவர்களைச் சமாதானப்படுத்தியுள்ளனர்.

பின்னர், அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரம், கோபம் குறையாத மனைவி சிவ்குமாரி, கொதிக்கும் எண்ணெய்யை தூங்கிக் கொண்டிருந்த தன்னுடைய கணவரின் முகத்தில் மீது ஊற்றியுள்ளார். அதிகாலை 5 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. வலி தாங்க முடியாமல் அரவிந்த் சத்தமிட்டுள்ளார். உடனடியாக உறவினர்கள் அரவிந்தை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதுதொடர்பாகக் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகுமாரி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிவகுமாரி தன்னுடைய செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கிறது.

Categories

Tech |