நம் முகத்தின் அழகை மேம்படுத்த காப்பி தூள் எப்படி பயன்படுத்தலாம் என்று இங்கே பார்க்கலாம்.
நாம் அன்றாடம் நம்முடைய முகத்தின் அழகை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறோம். எனவே முகத்தை அழகு படுத்த பல்வேறு பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம். ஆனால் காபி பொடியை அழகுக்கு பயன்படுத்துவது என்பது என்று நம்மில் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. தற்போது இது குறித்து பார்க்கலாம்.
கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து அதை மசித்துக் கொள்ளவும். அதோடு காபி பொடி ஒரு கப் கலந்து முகத்தில் பத்து பதினைந்து நிமிடங்களுக்கு பூசிக்கொள்ளவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
காபித் தூள் ஒரு ஸ்பூன், ஏலக்காய் பொடி ஒரு ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை ஒரு கப் சேர்த்து நன்கு கலந்து அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக முகம், கை, கால்களில் சேர்க்கவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்கவேண்டும்.
ஒரு கப் காபி பொடியில் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் ஒருமுறை செய்து பாருங்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு உங்கள் முகம் பளிச்சிடும்.
1 ஸ்பூன் காபிதூள், 2 ஸ்பூன் பட்டர், 1 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியாக பேஸ்ட் போல குழைத்து முகம், கை, கழுத்து பகுதிகளில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
4 ஸ்பூன் கப் காபி தூள், ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகம், கை, கால்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.