Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

“மத்திய அமைச்சராகும் OPS மகன்” பிரதமர் அலுவலகம் அழைப்பு…!!

தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்குவது குறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350_க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உரிமை பெற்று இருக்கிறது. இன்று மாலை 7 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் , ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் பல்வேறு துறை அமைச்சர்களும் பதவி ஏற்க இருக்கின்றார்கள்.

ரவீந்திரநாத் குமார் மோடி க்கான பட முடிவு

இந்நிலையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாஜக தேனி மக்களவை தொகுதியில் வெற்றிபெற்ற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு மத்திய இணை அமைச்சர் பொறுப்பு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அவருக்கு பிரதமர் அலுவலகத்திலிருந்து ரவீந்திரநாத் குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |