Categories
சினிமா தமிழ் சினிமா

இணையத்தில் வைரலாகும் ‘மாஸ்டர்’ பட சென்சார் சான்றிதழ்… இவ்வளவு பெரிய படமா?… !!!

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தின் சென்சார் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் விஜய்யின் நடிப்பில் தயாராகியுள்ள படம் மாஸ்டர் . லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ,அர்ஜுன் தாஸ் ,சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் நடிகர் விஜயின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு 50 சதவீத இருக்கைகளுடன் இயங்கிய திரையரங்குகளை 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளித்தது .

9 இடங்களில் கத்தரி

இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சென்சார் சான்றிதழ் இணையத்தில் வைரலாகி வருகிறது . அதில் மாஸ்டர் படம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது . இதைப்பார்த்த ரசிகர்கள் இவ்வளவு பெரிய படமா ? என வாயைப் பிளந்துள்ளனர் . ஏற்கனவே படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ஒன்பது இடங்களில் வன்முறை காட்சிகளை நீக்க அறிவுரை வழங்கி உள்ளதாக தகவல் வெளியானது . இதனால் மாஸ்டர் படத்திற்கு யுஏ சான்றிதழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது ‌.

Categories

Tech |