முருங்கைக்கீரை தேநீர் மூலமாக வாய்வழியாக தொற்று ஏற்படுவதிலிருந்து நம்மை நாம் காத்துக் கொள்ள இயலும்.
தேவையானபொருட்கள்:
புதினா இலைகள் – 3
நாட்டுச் சர்க்கரை – 1 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு – 2 தேக்கரண்டி
முருங்கைக் கீரை பொடி – 1 தேக்கரண்டி
கிரீன் டீ தேநீர் பொடி – 1 தேக்கரண்டி
செய்முறை:
முதலில் இரண்டு கப் அளவு தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்கு கொதித்த பின்னர் க்ரீன் டீ பொடி , முருங்கை கீரை பொடி, புதினா இலைகள், ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும்.
பின்பு அதனை இறக்கி எலுமிச்சைசாறு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து டம்ளரில் ஊற்றி குடிக்கலாம்.
ஏதேனும் ஒரு வேளை இந்த முருங்கைக் கீரை தேநீர் அருந்துவது நல்லது.