தியேட்டர்களில் ஒரே நாளில் தல -தளபதி படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் விஜய் ,அஜித் இருவரும் நண்பர்கள் என்றாலும் இவர்களது ரசிகர்கள் மோதிக் கொள்வது வழக்கம் . இவர்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகும் நாளை ரசிகர்கள் பண்டிகை போல் கொண்டாடுவார்கள் . சமூக வலைத்தளங்களில் தல தளபதி ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் இடம் பிடிக்க மோதிக் கொள்வார்கள் . ஆனால் கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ரசிகர்கள் தங்களது ஹீரோக்கள் படத்தை காண முடியாமல் தவித்து வந்தனர் .
திரையரங்குகள் திறக்கப்பட்டு எந்த ஒரு முன்னணி நடிகரின் படமும் இதுவரை வெளியாகாத நிலையில் சமீபத்தில் சில திரையரங்குகள் பழைய படங்களை ரீ ரிலீஸ் செய்து வந்தனர் . அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி புதுப்பேட்டை ,ஆயிரத்தில் ஒருவன் ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் தலைவா படமும், நடிகர் அஜித்தின் என்னை அறிந்தால் படமும் வருகிற ஜனவரி 8ஆம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இதையடுத்து தளபதி விஜய்யின் மாஸ்டர் வருகிற ஜனவரி 13-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .