அமித்ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வர இருக்க கூடிய 14ஆம் தேதியன்று சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.அதன் தொடர்ச்சியாக 14ஆம் தேதி நடைபெறும் துக்ளக் ஆண்டு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்ள இருப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. மேலும் 14ஆம் தேதியன்று உடல்நிலை சரியில்லாத காரணமாக சிகிச்சையில் இருந்து வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் அவர்களையும் அமித்ஷா சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேரள மாநிலத்தில் இருந்து சென்னை வருவதாக இருந்தது கடைசி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அவர் சென்னைக்கு வர மாட்டார் , அந்த பயணமும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிஉள்ளது. அவருக்கு பதிலாக பாஜகவின் தேசியத் தலைவராக இருக்கக் கூடிய ஜெ.பி நட்டா அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாகவும் பாஜக தரப்பில் இருந்து தகவல் வெளியாகி தெரிவிக்கின்றன.