Categories
அரசியல் மாநில செய்திகள்

திக்.. திக்.. அதிமுக! எல்லாமே லீக் ஆகிடுச்சு… ஸ்கெட்ச் போட்ட பாஜக…. களமிறங்கிய தே.தலைமை …!!

சென்னை வர இருந்த அமித்ஷா வருகை ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா சென்னை வர இருக்கின்றார்.

14ஆம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அன்றைய தினம் கேரளாவில் இருந்து சென்னை வந்து அமித்ஷா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்றும், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்தை சந்திக்க இருப்பதாகவும் சொல்லப்பட்டது.

சட்டமன்ற தேர்தலை தமிழகம் சந்திக்க இருக்கும் நிலையில் அமித்ஷாவின் வருகை மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பாஜக சார்பாக போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் என்ன ? என டெல்லி தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. சமூக வலைதளங்களிலும் 37 தொகுதிகளில் பாஜக போட்டியிட இருப்பதாக ஒரு பட்டியல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அமித்ஷா வருகை மேலும் கவனம் பெற்று இருந்தது.

இந்நிலையில் அமித்ஷாவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷாவுக்கு பதிலாக பாஜகவின் தேசியத் தலைவர் ஜேபி நட்டா சென்னை வர இருப்பதாகவும், அவர் துக்ளக் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரியவருகின்றன. இதனால் தேர்தல் கூட்டணியை உறுதி செய்யப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

அமித்ஷா உள்துறை அமைச்சராக இருந்தாலும் கூட பாஜகவின் தேசியத் தலைமை கூட்டணி குறித்து முடிவெடுக்க வேண்டும். அதனால் தேசியத் தலைவரே சென்னை வரை இருப்பதால் பாஜக – அதிமுக கூட்டணி இறுதி வடிவம் பெறும் என நம்பபடுகிறது. பாஜகவின் தேசிய தலைவரே நேரடியாக சென்னை வர இருக்கும் நிலையில் அதிமுக 37 தொகுதிகளை கொடுக்குமா ? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனால் அதிமுக நிர்வாகிகள் திக்திக் மன நிலையிலேயே  தற்போது இருக்கின்றனர்.

Categories

Tech |