சிறுமி ஒருவர் வீட்டில் பேச்சு மூச்சின்றி உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கனடாவில் இருக்கும் Laval என்ற நகரில் ஏழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது. அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு வீட்டில் 7 வயது சிறுமி ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடைத்துள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மேலும் சிறுமியின் உடல் முழுவதும் காயங்கள் மற்றும் கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததாக காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் காவல்துறையினருடன் இணைந்து இளைஞர் மற்றும் மனித உரிமைகள் ஆணையம் விசாரணையை தொடங்கியிருக்கிறது. மேலும் இந்த சம்பவம் நடந்த அன்று வீட்டில் அவரின் பெற்றோர்கள் உட்பட 6 பேர் இருந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணையின் முடிவில் தான் சிறுமியின் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று தெரிவித்துள்ளனர்.