பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பிற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடப்பட்டு வருகிறது. முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், பள்ளிகள் இன்னும் திறக்கவில்லை. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கருத்து கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் பெரும்பாலான பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பொங்கலுக்கு பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. இதனால் 10, 11, 12 வகுப்புகளுக்கான பள்ளி 18ஆம் தேதி திறக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.