தி லிப்ட் பாய் என்ற ஹிந்தி படத்தை இயக்குனர் வசந்தபாலன் தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக பரவிய தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் இயக்குனர் வசந்தபாலன் 2002ல் வெளியான ஆல்பம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து இவர் இயக்கத்தில் வெளியான வெயில் ,அங்காடித்தெரு ,காவியத்தலைவன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது . அதிலும் குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான வெயில் படத்திற்கு தேசிய விருது கிடைத்தது . தற்போது இவர் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஜெயில்’. இந்தப் படத்தில் ஜீவி பிரகாஷ் ,அபர்னதி ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் 2019ஆம் ஆண்டு வெளியான ‘தி லிப்ட் பாய்’ என்ற ஹிந்தி படத்தை தமிழில் இயக்குனர் வசந்தபாலன் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் பரவியது .
பல முக்கியமான இணையதளங்களில் நான் இந்தியில் வெளியான "Lift boy " திரைப்படத்தை ரீமேக் செய்யப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
அது முற்றிலும் முற்றிலும் தவறான தகவல்.— Vasantabalan (@Vasantabalan1) January 4, 2021
மேலும் இந்த படத்தில் கைதி, அந்தகாரம், மாஸ்டர் படங்களில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது . இந்நிலையில் இது முற்றிலும் தவறான தகவல் என தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். அதில் ‘பல முக்கியமான இணையதளங்களில் நான் ஹிந்தியில் வெளியான தி லிப்ட் பாய் என்ற படத்தை ரீமேக் செய்யப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது . அது முற்றிலும் முற்றிலும் தவறான தகவல்’ என பதிவிட்டுள்ளார். ஆனால் இதில் அர்ஜுன் தாஸை வைத்து படம் இயக்க இருப்பதாக வெளியான தகவலை அவர் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .