Categories
மாநில செய்திகள்

தமிழக முதியவர்களே எச்சரிக்கை – அலர்ட்…!!

தியேட்டரில் 100% இருக்கைக்கு அனுமதி அளித்தால் முதியவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் இன்னும் கொரோனவிலிருந்தே மீண்டு வராத நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் பிரிட்டனில் இருந்து வந்தவர்கள் மூலம் தமிழகத்திலும் பரவி உள்ளது. இந்நிலையில் உருமாறிய கொரோனா, பறவை காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் வரிசையாக பரவி வருகின்றன. இதையடுத்து தமிழக அரசு திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனால் கொரோனா பரவலாம் என்று பல தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

எனவே திரையரங்குகளில் 100 சதவீதஇருக்கை  பயன்படுத்தும் அனுமதியை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மருத்துவ குழுவினர் குகானந்தம் வலியுறுத்தியுள்ளார். திரையரங்குகளை திறப்பதன் மூலம் வீட்டில் இருக்கும் முதியவர்களுக்கும் நோய் பரவலாம் என்று எச்சரிக்கை விடுத்து அவர், மக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு திரையரங்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |