Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு அருகே விளையாடிய சிறுவன்… விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு… காரணம் என்ன?…

காணாமல் போன சிறுவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் பாலசுப்பிரமணி – முத்துலட்சுமி. இவர்களுடைய வளர்ப்பு மகன் தர்ஷன்(7). தர்ஷன் கடந்த 4ஆம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அவன் காணாமல் போனதாக பாலசுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுவனை தீவிரமாக  தேடிவந்தனர். இந்நிலையில் இன்று காலை பசுபதிபாளையம் அருகே உள்ள விவசாய கிணற்றில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டான்.

இதையடுத்து காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் சிறுவனின் தாயார் முத்துலட்சுமி தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் புத்தாண்டு தினத்தன்று குளிர்பான பாட்டில் தொடர்பாக அப்பகுதியில் உள்ள சிறுவர்களுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் உள்ள ஐந்து சிறுவர்களிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |