பிக்பாஸ் நிகழ்ச்சியின் அன்சீன் வீடியோ வெளியாகியுள்ளது .
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒரு மணி நேர எபிசோட் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது . இதில் வெளியாகாத அன்சீன் வீடியோக்கள் விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள அன்சீன் வீடியோவில் பாலா ,ரம்யா இருவரும் பாட்டுப் பாடி ஆட்டம் போடுகின்றனர் .
#BiggBossUNSEEN – இன்று இரவு 10:30 மணிக்கு நம்ம #VijayMusic ல.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #பிக்பாஸ் pic.twitter.com/93BFiJPM2S
— Vijay Takkar (@vijaytakkaroffl) January 6, 2021
அதில் பாலாவும் ரம்யாவும் இணைந்து ‘காசு இல்ல கவலை இல்ல .நாங்க ரொம்ப நல்ல புள்ள. பேக்ரவுண்ட் இல்ல ஆனா ப்ராப்ளம் இல்ல .எவ்வளவு துன்பத்திலும் நாங்க சோர்ந்தது இல்ல. நல்லவன் கெட்டவன் யாரும் இல்ல எல்லாம் நம்ம பார்க்கும் பார்வையில .பிக்பாஸ் ஈசி இல்ல ரொம்ப கஷ்டம் நெஞ்சுக்குள்ள’ எனப் பாட சைடில் முறைத்துக் கொண்டு நிற்கிறார் ஆரி . இந்தப்பாடல் ஜாலியாக இருக்கிறது என ரம்யா கூறுவது போல் இந்த வீடியோ நிறைவடைகிறது.