Categories
தேசிய செய்திகள்

ஜனவரி 8 ஆம் தேதி முதல்…. பிரிட்டனுக்கு விமான சேவை – மத்திய அரசு…!!

ஜனவரி 8 ஆம் தேதி முதல் பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் புதிதாக உருமாறிய கொரோனா பிரிட்டனில் பரவி வருகிறது. இது முந்தைய வைரசை விட வேகமாக பரவி வருவதாகவும், வீரிய மிக்கதாகவும் உள்ளதாக பிரிட்டன் அரசு கூறியது. இதையடுத்து பிரிட்டனுக்கு இடையேயான விமான போக்குவரத்தை பல நாடுகள் தடை செய்தது. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறிய கொரோனா தீவிரம் அடைந்துள்ளது.

இந்நிலையில் ஜனவரி8 முதல் 30ம் தேதி வரை 5 சர்வதேச விமான நிலையங்களில் இருந்து பிரிட்டனுக்கு விமானம் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களில் இருந்து பிரிட்டனுக்கு  விமானம் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |