பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உ.பி அரசு தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
உத்திரப்பிரதேசத்தில் அண்மைக்காலமாக பல்வேறு பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அரங்கேறி வருகிறது. இதில் பல பெண்களும், சிறுமிகளும் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது உத்தரப்பிரதேசத்தில் 50 வயது பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருடைய பிறப்பு உறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் இந்த சம்பவம் அங்கு மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹத்ராஸ் கொடுமையை அடுத்து பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த “மிஷன் சக்தி” என்ற திட்டத்தை அன்மையில் உ.பி அரசு கொண்டு வந்தது. ஆனாலும் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவது தொடர்கிறது எனில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க உ.பி அரசு தவறி விட்டதாக காங்கிரஸ் கட்சியினரும், எதிர்க்கட்சிகளும் கடுமையாக விமர்சித்துள்ளன.