Categories
கரூர் மாவட்ட செய்திகள்

பொது இடத்தில் பலர் முன்னிலையில்… பெண்ணுக்கு ஏற்பட்ட இழப்பு… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம ஆசாமிகள் பெண்ணிடம் இருந்து 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கரூர் மாவட்டத்திலுள்ள சேலம் பைபாஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்-பாப்பாத்தி தம்பதியினர். இவர் நேற்று திருக்காம்புலியூர் பஸ் ஸ்டாப்பில் பஸ் ஏறுவதற்காக காத்துக்கொண்டிருந்தார். அச்சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம ஆசாமிகள் பாப்பாத்தியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கரூர் காவல் நிலையத்தில் பாப்பாத்தி அம்மாள் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர். மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் பெண்ணிடம் சங்கிலி பறித்து சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |