Categories
கிரிக்கெட் விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் “அசத்தும் இங்கிலாந்து” 106 குவித்த இரண்டு ஜோடிகள்…!!

 தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதிய உலக கோப்பையின் முதல் போட்டியில் 100 ரன் பார்ட்னர் ஷிப்பை இரண்டு ஜோடிகள் குவித்து அசத்தியுள்ளது.

12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.  லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார். இதையடுத்து தனது முதல் பேட்டிங்கை இங்கிலாந்து விளையாடி வருகின்றது. முதல் ஓவரில் அந்த அணியின் தொடக்க வீரர் பேர்ஸ்டோ 0 ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பின்னர் களமிறங்கிய  ராய் , ரூட் , மோர்கன் , ஸ்டோக்ஸ் ஆகியோரின் அசத்தல் அரை சதத்தால் அந்த அணியில் ஸ்கோர் நல்ல நிலையை அடைந்தது. முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் விக்கெட் என்ற நிலையில் ஆட்டத்தை தொடங்கிய அந்த அணியின் ராய் , ரூட் ஜோடி 106 ரன்களை குவித்தும் ,  மோர்கன் , ஸ்டோக்ஸ் ஜோடி 106 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணி 43 ஓவர்களில் 252 ரன்னுக்கு 5 விக்கெட்டை இழந்து ஆடி வருகின்றது. அந்த அணியின் சார்பில் ஸ்டோக்ஸ் 69 ரன்னுடனும் , மோயின் அலி 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்த இரண்டு ஜோடியும் 106 ரன் குவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |