Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தூங்கும் போது நடந்த சம்பவம்… காத்திருந்த அதிர்ச்சி… காட்டிகொடுத்த CCTV கேமரா …!!

டிரைவரின் செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த செல்போனை பறிமுதல் செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசியில் சரக்கு ஆட்டோ டிரைவரான தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு ஆட்டோவில் சென்றுள்ளார். அங்கு மார்க்கெட்டின் முன்புறம் ஆட்டோவை நிறுத்தி விட்டு அவர் சிறிது நேரம் தூங்கிய போது, அங்கு வந்த மர்ம நபர்கள் ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள தினேஷ்குமாரின் செல்போனை திருடி சென்றனர். இச்சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் தினேஷ்குமார் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் விரைந்து வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, 2 மர்ம நபர்கள் செல்போனை ஆட்டோவிலிருந்து திருடி சென்றது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மார்க்கெட் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்ததில், அவர்களில் ஒருவர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை பகுதியில் வசித்து வரும் மகேந்திரன் என்பதும், மற்றொருவர் திருச்சியில் மாவட்டத்தில் வசித்து வரும் சரத்குமார் என்பதும் தெரியவந்துள்ளது. எனவே போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் திருடிசென்ற செல்போனையும் கைப்பற்றினர்.

Categories

Tech |