திருமணம் செய்துகொள்வதற்கு விருப்பமில்லாத காரணத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள டி.கே.பள்ளி என்ற பகுதியில் மஞ்சுநாத் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தீட்ஷிதா என்ற ஒரு மகள் உள்ளார். இவர் குப்பதிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு பொங்கல் பண்டிகைக்கு பின் திருமணம் முடிக்க அவரது பெற்றோர் முடிவு எடுத்தனர். இதனையடுத்து தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டாம் என்றும், திருமணத்தில் செய்து கொள்வதற்கு தனக்கு விருப்பமில்லை என்றும் தீட்ஷிதா அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
ஆனால் மகளின் வார்த்தைகளை கேட்டிராத அவளது பெற்றோர்கள், அவளுக்கு நிச்சயம் செய்து, வருகிற 15-ஆம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடு செய்தனர். இதனையடுத்து தனது பெற்றோரின் இந்த முடிவால் மனமுடைந்த திட்ஷிதா அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் இச்சம்பவம் குறித்து குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கௌரிஷங்கர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.