Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கைது செய்யப்பட்ட மூவர்… நீதிமன்றம் அதிரடி உத்தரவு… பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் சம்பவம்…!!

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரையும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல், அதனை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பொள்ளாச்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் மற்றும் திருநாவுக்கரசு என்பவரை கைது செய்தனர். இதனையடுத்து இவ்வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேலும் 3 பேரை இவ்வழக்கில் சம்மந்தப்பட்டவர்கள் என்று போலீசார் கைது செய்துள்ளனர்.  இதனையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்ட பைக் பாபு, கெரோன்பவுல் மற்றும் அருளானந்தம் ஆகிய மூவரிடமும் சிபிஐ போலீசார் விசாரணை நடத்தினர்.  இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட மூவரும் கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  இந்நிலையில் வருகின்ற ஜனவரி 20 ஆம் தேதி வரை இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அம்மூவரையும் நீதிமன்ற காவலில் வைத்து சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Categories

Tech |