Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

முருகனை தரிசிப்பதற்குள்… பக்தர்களுக்கு நடந்த விபரீதம்… வழியிலேயே வந்த வினை…!!

திருசெந்தூருக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது லாரி மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேலஈரால் வடக்குத் தெருவில் முத்துராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரின் தலைமையில் திருச்செந்தூருக்கு சுமார் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாதயாத்திரை சென்றனர். அப்போது மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள எப்போதும்வென்றான் பகுதியில் பக்தர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த லாரி ஒன்று பக்தர்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மேலஈரால் பகுதியில் வசித்து வந்த முகேஷ் குமார் என்ற சிறுவனும், குமார் என்பவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் கோவில்பட்டியில் உள்ள கடலையூரில் வசித்து வந்த அங்கப்பன் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும், மேலஈரால் பகுதியில் வசித்துவந்த ஆதி மோகன் மற்றும் ராகுல்   ஆகியோரும் பலத்த காயமடைந்தனர்.  இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த எப்போதும்வென்றான் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றியதோடு, படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விபத்துக்கு காரணமான தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Categories

Tech |