Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

வீடு சொல்லுறத சொல்லட்டும்…! நான் இப்படி தான் செய்வேன்… முதியவருக்கு குவியும் பாராட்டு…!!

யாசகம் மூலம் பெற்ற ரூ.1௦௦௦௦ பணத்தை வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களுக்கு உதவுமாறு, நெல்லை மாவட்ட கலெக்டரிடம் முதியவர் வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆலங்கிணறு என்ற கிராமத்தில் பூல்பாண்டி என்பவர் வசித்து வருகிறார்.  இவர் ஊர் ஊராக சென்று கடந்த சில ஆண்டுகளாக யாசகம் பெற்று அந்தப் பணத்தை அங்குள்ள பள்ளிக்கூடங்களுக்கு நன்கொடையாக அளித்துள்ளார். இவர் தென் மாவட்டங்களில் அமைந்துள்ள சுமார் 400 பள்ளிகளுக்கு நன்கொடை மற்றும் கல்வி உபகரணங்களை வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து இவர் மதுரையில் பெற்ற யாசகம் மூலம் வந்த பணத்தை கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு கொடுத்துவிட்டார். அதோடு ரூபாய் 2 லட்சத்து 70 ஆயிரம் பணத்தை மதுரை மாவட்ட கலெக்டரிடம் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் யாசகமாக பெற்ற பணத்தை  நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணுவிடம் கொடுத்து, அப்பணத்தை கொரோனாவால்  வாழ்வாதாரத்தை இழந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு வழங்குமாறு கூறினார். இதனையடுத்து தனது இந்த சேவை குறித்து பூல்பாண்டி கூறும்பொழுது, தான் யாசகம் மூலம் ஒவ்வொரு பகுதியிலும் பெற்ற பணத்தை அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு வழங்கி வருவதாகவும், தற்போது கொரோனா ஊரடங்கில் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தான் இவ்வாறு யாசகம் பெறுவதை தனது குடும்பத்தினர் விரும்பாவிட்டாலும், தொடர்ந்து மக்களுக்காக இச்சேவையை செய்து வருகிறேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |