இந்திய முழுவதும் பறவை காய்ச்சல் பரவி வருவதால் மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், உருமாறிய கொரோனா வைரஸ் என்று ஒரு பக்கம் மக்களை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கேரளாவில் பறவை காய்ச்சல் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. மேலும் இந்தியாவின் வட மாநிலங்களான ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் பரவி காய்ச்சல் குறித்த அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பறவை காய்ச்சலை கண்டறிய டெல்லியில் மத்திய அரசு கண்காணிக்கும் மையத்தை ஏற்படுத்தியுள்ளது.
பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படும் பறவைகளின் விவரங்கள் மற்றும் மாதிரிகளை மாநில சுகாதாரத்துறை ஆய்வு செய்து உடனுக்குடன் அனுப்பி வைக்கவும், அனைத்து விவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பிக்குமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தேசிய அளவில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதா? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது. இதனால் பெரும் அச்சம் எழுந்துள்ளது.