Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் ஜனவரி 11 வரை… மீண்டும் உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் உருவான 2 புயல்களால் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவியது. தற்போது கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக கன மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்சமாக கடலூர் மாவட்டம், மேமாத்தூர் 20 செ.மீ, வேப்பூரில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சியில் ஏரிக்குள் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 600 ஆண்டுகளில் 300 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |