பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் பரவலாம் என்று மத்திய அமைச்சர் சஞ்சீவ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து கேரளாவின் ஆலப்புழா பகுதியிலிருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இருந்து கோழி, வாத்து, முட்டை மற்றும் இறைச்சி உள்ளிட்டவை தமிழகம் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தீவனங்களை கொண்டு வரும் வாகனங்களை திருப்பி அனுப்பவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமன்றி கேரள மற்றும் தமிழகம் எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் பரவலாம் என மத்திய அமைச்சர் சஞ்சீவ் தெரிவித்துள்ளார். பறவைக் காய்ச்சல் நோய்க்கு இதுவரை தடுப்பு மருந்து எதுவும் இல்லை. ஆனால் இந்தியாவில் இதுவரை யாருக்கும் பறவை காய்ச்சல் நோய் பாதிப்பு இல்லை. ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா மற்றும் இமாச்சல் மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த பறவைகளை எச்சரிக்கையுடன் அப்புறப்படுத்த வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.