தொடர்ந்து 2 வது முறையாக குடியரசு தலைவர் பதவி பிரமாணம் செய்துவைக்க பதவியேற்றார் நரேந்திர மோடி .
டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகையில் நரேந்திர மோடியை பிரதமராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதனையடுத்து இந்தியாவின் 17-வது பிரதமராகவும், தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் மோடி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
இந்த பதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்கள், இந்திய தேசிய கட்சி தலைவர்கள், பிரபலங்கள், உட்பட எட்டாயிரம் பேர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்பு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.