Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே வீடு கட்ட கூடுதல் நிதி… தமிழக முதல்வர் அதிரடி…!!!

தமிழகத்தில் வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக நிதி வழங்குவது பற்றிய ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீடு கட்டும் திட்டத்தில் கூடுதலாக நிதி வழங்குவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் மக்களை சந்தித்து தமிழகத்திற்காக உழைக்கும் கட்சி அதிமுக. பிற கட்சியினர் தங்கள் தொழிலை பாதுகாக்கவே பதவிக்கு வருகின்றனர். இலவசமாக நிலம் தருவதாக கூறும் திமுகவின் பொய் பரப்புரையை நம்பி மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |