Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அழகா இருக்குதே! வலையில் சிக்கியது மீன் இல்லை…. அறிய வகை உயிரினம்…!!

மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை அழகிய கடல் பசுவை மீனவர்கள் மீண்டும் கடலினுள் விட்டுள்ளனர்.

தமிழகத்தில் தூத்துக்குடி முதல் ராமநாதபுரம் வரை மன்னார் வளைகுடா கடல் பரந்து விரிந்து காணப்படுகின்றது. இந்த பகுதியில் அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. இங்கு மட்டும் 3600 க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. மேலும் அவற்றில் அறிய வகை உயிரினங்களும் 12 ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றன.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி மீனவர்கள் மீன் பிடித்துள்ளனர். அப்போது அவர்கள் விரித்த வலையில் அழகிய குட்டி கடல் பசு ஒன்று சிக்கியுள்ளது. மீனவர்கள் அந்த அழகிய குட்டி கடல் பசுவை மீண்டும் கடலில் சென்று விட்டுள்ளார். இதையடுத்து கடல் பசு துள்ளிக் குதித்தபடி கடலுக்கு சென்ற சம்பவம் அனைவரையும் மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Categories

Tech |