பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மன்னார்குடியில் உள்ள நியாய விலை கடையில் பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றுள்ளது. இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் காமராஜ்க்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து காமராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தற்போது தனிமை படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.