தனியார் தொலைதொடர்பு நிறுவனமான விஐ தற்போது வாடிக்கையாளர்களுக்கு எண்ணற்ற ஆஃபர்களை வழங்கி வருகிறது.
வேடபோன் மற்றும் ஐடியா நிறூவனங்கள் இணைந்து விஐ நெட்வோர்க் என சந்தையில் வலம் வருகிறது. தங்களது போட்டியாளர்களான ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களிடம் இருந்து தங்களது வாடிக்கையாளர்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், புதிய வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலும் ஏராளமான ஆஃபர்களை வழங்குகிறது. அந்த வகையில் தற்போது இரட்டிப்பு டேட்டா ஆஃபரை வழங்கியுள்ளது. விஐ நெட்வொர்க்கில் பொதுவாக ரூ.299, ரூ.449, ரூ.699க்கு ரீசார்ஜ் செய்யும் போது நாளொன்றிற்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
தற்போது இதனை இரண்டு மடங்காக உயர்த்திய்யுள்ளது.
இதில் தற்போது ரூ.299க்கு ரீசார்ஜ் செய்யும் போது, நாளொன்றிற்கு 4 ஜிபி டேடா என 28 நாட்களுக்கு கிடைக்கும். இது தவிர வரம்பற்ற அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. ஓடிடியில் பொழுதுபோக்குக்காக விஐ திரைப்படங்களுக்கான சந்தாக்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ரூ.449க்கு ரீசார்ஜ் செய்யும் போது தினமும் 4 ஜிபி டேடா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் இலவச 100 எஸ்.எம்.எஸ்கள் கிடைக்கும்.
இந்த பேக் 56 நாட்களுக்கு வேலிடிட்டி கொண்டது. மேலும், உங்களுக்கு இலவச Vi திரைப்படங்கள் மற்றும் டிவி சந்தாக்களும் வழங்கப்படுகின்றன. ரூ.699க்கு ரீசார்ஜ் செய்யும் போது தினமும் 4 ஜிபி டேடா, வரம்பற்ற அழைப்புகள், தினமும் இலவச 100 எஸ்.எம்.எஸ்கள் என 84 நாட்களுக்கு கிடைக்கும்.