ட்விட்டரில் விமர்சித்த ரசிகருக்கு நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளார் .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் மாதவன் நடிப்பில் தயாராகியுள்ள ‘மாறா’ படம் நாளை ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது . இந்நிலையில் நடிகர் மாதவன் இந்தி நடிகர் அமித் சாத் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் . இந்த பதிவை மாதவன் ரசிகர்கள் பாராட்டி இணையத்தில் வைரலாக்கி வந்தனர் . இதையடுத்து ஒரு ரசிகர் இந்த பதிவுக்கு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் . அதில் ‘ஒரு காலத்தில் மாதவன் என் மனம் கவர்ந்த நடிகர்.
ஆனால் தற்போது அவர் தனது சினிமா வாழ்க்கையும் ,ஆரோக்கியத்தையும் போதை பழக்கத்தால் அளிப்பதை பார்க்க மிக வருத்தமாக உள்ளது. இப்போது அவர் கண்களையும், முகத்தையும் பாருங்கள் எல்லாவற்றையும் அது சொல்லும் என குறிப்பிட்டுள்ளார் . இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நடிகர் மாதவன் ‘இதையெல்லாம் நீங்கள் கண்டுபிடித்து இருக்கிறீர்களா? ? உங்கள் பெற்றோரை நினைக்கும்போது மிக வருத்தமாக உள்ளது . நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை பார்க்க வேண்டும்’ என பதிலடி கொடுத்துள்ளார் .