Categories
உலக செய்திகள்

நண்பர்களின் ஒப்பந்தத்தால்… கோடீஸ்வரர்களாக மாறிய… ஆச்சர்ய சம்பவம்…!!

ஒரே நாளில் கிடைத்த அதிர்ஷ்டத்தால் நண்பர்கள் 7 பேர் கோடீஸ்வரர்களாக மாறியுள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  

கேரளாவை சேர்ந்த அப்து சலாம் என்பவர் ஓமனில் மனைவியுடன் வசித்து வருகிறார். மேலும் ஓமனில் தொழில்கள் செய்து வருகிறார். இந்நிலையில் அப்து சலாம் மற்றும் அவரது நண்பர்கள் 7 பேர் இணைந்து லாட்டரி டிக்கெட்டுகளை வாங்க முடிவெடுத்துள்ளனர். மேலும் அதில் யாருக்குப் பரிசு விழுகிறதோ அவர் அதனை மற்ற நண்பர்களுடன் சமமாக பிரித்துக் வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து அபுதாபி பிக் டிக்கெட் லாட்டரியில் அப்துசலாமுக்கு OMR 2 மில்லியன் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. இதனால் அப்து சலாம் மற்றும் அவரது நண்பர்களும் மிகப் பெரிய கோடீஸ்வரர்களாக ஆகியுள்ளனர்.

மேலும் அப்துல் சலாம் கூறுகையில், “எனக்கு பரிசுத்தொகை கிடைத்துள்ளதாக உறவினர்கள் கூறினர். ஆனால்  நான் அதை நம்பவில்லை. மேலும் சகோதரர் என்னை நம்ப வைக்க முயற்சி செய்தும் அதை நான் கேட்கவில்லை. அதன்பின்பு லாட்டரி அமைப்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு பேசிய பின்னரே அதை நான் நம்பினேன். மேலும் இந்த பரிசுத் தொகையில் குறிப்பிட்ட தொகையை நல்ல காரியங்களுக்காக செலவிடுவதற்கு நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என்றார். மேலும் கேரளாவில் மழை வெள்ளம் மற்றும் கொரோனாவால் பல மக்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர்.

அவ்வாறு கஷ்டப்படும் மக்களுக்கு உதவுவதற்கு முடிவெடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் திருமணங்கள் போன்ற விழாக்களை பல மக்களால் பெரிய அளவில் நடத்த முடியாமல் உள்ளது. மேலும் அதனை நாங்கள் நடத்திக்கொடுக்க உள்ளோம் என்று கூறியுள்ளார். அதன் பின் இவரின் மனைவி சொந்த ஊருக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து அவர் இச்செய்தியை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் அவருக்கு பிரசவம் முடிந்துவிட்ட நிலையில் மீண்டும் ஓமனுக்கு செல்லயிருக்கின்றனர்.

Categories

Tech |