ட்ரம்ப் தனது பதவிக்குரிய வேலையை செய்யாமல் புலம்புவதிலும் புகார் செய்வதிலும் மட்டுமே அதிக நேரத்தை செலவிடுகிறார் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். எனவே வருகின்ற 20ஆம் தேதி அமெரிக்காவில் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார். ஆனால் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். எந்த ஆதாரங்களும் இல்லாமல் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் கூறி வருகிறார்.
இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் செனட் சபைக்கு போட்டியிடும் 2 ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஜோ பைடன் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, ட்ரம்ப் அவரது பதவிக்கு உரிய வேலையை பார்க்காமல் புலம்புவதிலும், புகார் கூறுவதிலும் அதிக நேரத்தை செலுத்தி வருகிறார்.
அவர் ஏன் இன்னும் ஜனாதிபதி பதவியை இவ்வளவு விரும்புகிறார் என்று எனக்கு தெரியவில்லை.அவர் அதற்குரிய பணியை செய்ய விரும்பவில்லை. புலம்புவதிலும் புகார் கூறுவதிலும் தான் அதிக நேரத்தை செலவிடுகிறார் என்று கூறினார்.