குடும்பத் தகராறில் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரல் பகுதியை சேர்ந்த தம்பதியினர் துரைபழம் – தங்க லதா . இத்தம்பதியருக்கு 22 வயதில் சுடலை செல்வம் என்ற மகன் உள்ளார். சுடலை செல்வம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். ஆனால் அவரது படிப்புக்கேற்ற சரியான வேலை எதுவும் கிடைக்காததால் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் அவரது தாயார் தங்க லதா சுடலை செல்வத்தை வேலைக்கு செல்லாமல் இருப்பதை கூறி கண்டித்துள்ளார்.
நேற்று முன்தினம் மீண்டும் சுடலை செல்வத்தை திட்டி விட்டு வெளியே சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு தங்க லதா அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த சுடலை செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.