திருமணம் சீரியல் ஜோடி சந்தோஷ்- ஸ்ரேயாவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது .
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று ‘திருமணம்’. இந்த தொடரின் முதன்மை கதாபாத்திரங்களான சந்தோஷ் மற்றும் ஜனனி ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . ஆனால் கொரோனா ஊரடங்கு இருக்கு பிறகு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடர் திடீரென அக்டோபர் 16ஆம் தேதி நிறைவு பெற்றது. இதனால் திருமணம் சீரியல் ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த சீரியலை மிஸ் செய்வதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வந்ததால் மீண்டும் முதலில் இருந்து மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது . இதையடுத்து இவர்கள் மீண்டும் இணைந்து எப்போது நடிப்பார்கள் ?என்ற ஆவலில் இருந்தனர் ரசிகர்கள் . இந்நிலையில் சந்தோஷ் மற்றும் ஸ்ரேயா இணைந்து ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் இருவரும் இணைந்து எடுத்த புதிய புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது .