ட்ரம்பின் ஆதரவாளரான பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள நாடாளுமன்றத்திற்குள் ட்ரம்பின் ஆதரவாளர்கள் திடீரென நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர், அப்போது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அவரின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வியுற்றார். எனினும் அதனை அவரின் ஆதரவாளர்கள் ஏற்க மறுக்கின்றனர். மேலும் ஜோபைடனின் வெற்றி ஆவணப்படுத்தப்படுவதை தடுக்கும் நோக்கில் நேற்று மாலையில் திடீரென அவர்கள் அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் அதிரடியாக நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினருக்கும் ட்ரம்பின் ஆதரவாளர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த மோதல் பெரிதாகியுள்ளது. இதனால் காவல்துறையினர் பலர் படுகாயமடைந்துள்ளனர். அப்போது நடந்த கலவரத்தில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மேலும் அந்தப் பெண் San Diego என்ற பகுதியைச் சேர்ந்த Ashli Babit என்று தெரியவந்துள்ளது. மேலும் Ashli என்ற இந்த பெண் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராம். இதற்கு முன்பு இவர் விமானப்படை வீராங்கனையாக இருந்துள்ளார். இந்நிலையில் இவரது மார்பில் துப்பாக்கியால் சுடப்பட்டதால் பல மணி நேரங்களுக்கு பின்பு உயிரிழந்துள்ளார். மேலும் நடந்த இந்த மோதலில் Ashli யை யார் சுட்டது? என தெரியவில்லை என்று கூறப்பட்டுள்ளது.