2021 வருடத்தில் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் இந்த ஆண்டு 2021ல் மாஸ்டர், ஈஸ்வரன், அண்ணாத்த, இந்தியன் 2, வலிமை, ஜகமே தந்திரம் போன்ற திரைப்படங்களின் வெளியீட்டை பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்த வரிசையில் மாஸ்டர், ஈஸ்வரன் இரண்டு திரைப்படங்ளும் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படத்தில் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா, சாந்தனு, கௌரி கிசன் போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர். மிக குறுகிய நாட்களில் ஈஸ்வரன் படத்தை முடித்து வெளியிட தயார்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
மேலும் சிம்பு ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள். அதேபோல் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த, கமலின் இந்தியன் 2 படங்கள் சில பிரச்சினைகளை சந்தித்தாலும் 2021ல் ரிலீசுக்கு தயாரிப்பு தரப்பு மும்மரமாக உள்ளது. அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பு தற்போது நடந்துகொண்டிருக்கிறது. வருகிற மே 1, அஜித்தின் பிறந்தநாளுக்கு படத்தை வெளியிடுவதாக படக்குழு கூறியதாக இணையத்தில் பேசப்படுகிறது. தனுசின் ஜகமே தந்திரம், முழுக்க முழுக்க லண்டனில் எடுக்கப்பட்ட படம் என்றே கூறப்படுகிறது. ஆனால், இந்த படத்துக்கான அப்டேட்கள் தெளிவாக இல்லை. இருப்பினும் இந்த வருடமே படத்தை ரிலிஸ் செய்ய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.