தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டால் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் ரிலீஸ் ஆகாது என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் மற்றும் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர இருப்பதால், விஜய் மற்றும் சிம்பு ஆகிய நடிகர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்,உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் 50 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத ரசிகர்களின் அனுமதிக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரித்த உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் 100 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி என்ற உத்தரவை திரும்ப பெற்றுக்கொண்டால் மாஸ்டர் படம் மட்டுமே வெளியிடப்படும் என திருப்பூர் சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார். 100% இருக்கை அனுமதியை குறைந்தால் ஈஸ்வரன் படம் வெளிப்படாது. மாஸ்டர் படம் வெளியாகாமல் போனால் மட்டுமே ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களை பற்றி யோசிப்போம் என்று கூறியுள்ளார்.