கேரளாவில் பரவும் பறவைக்காய்ச்சல் கன்னியாகுமாரி எல்லைக்கு வராமல் தடுக்க கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
கேரள மாநிலத்தில் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வேகமாக பரவி வரும் ஒரு புதிய நோய் பறவை காய்ச்சல். இதனையடுத்து நோய் பரவி வரும் பகுதிகளை சுற்றியுள்ள சில கிலோமீட்டர் தூரத்தில் வளர்க்கப்படும் கோழி வாத்து ஆகிய பறவைகளை கொல்லும் பணி நடைபெறுகிறது. இதனால் கேரள அரசு பறவை காய்ச்சலை மாநில பேரிடர் என அறிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் பரவிவரும் பறவை காய்ச்சல் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட கலெக்டர் அரவிந்த் கடும் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி எல்லையில் கால்நடை உதவி மருத்துவர்களை தலைமையாகக் கொண்டு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டு பறவை காய்ச்சல் மேலும் பரவாமல் கண்காணிக்கும் பணிகள் நடைபெறுகிறது. களியக்காவிளை எனும் பேரூராட்சியில் படந்தாலுமூடு என்னும் இடத்தில் கால்நடை மருத்துவத் துறையின் சார்பாக குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெறுகிறது.
இக்குழுவினர் கேரளா மாநிலத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு வரும் வாகனங்களை சோதனை செய்து கிருமிநானி போன்றவற்றை தெளித்து வருகின்றனர்.அதோடு பறவைகளை ஏற்றி வரும் வாகனங்களை தடுத்து திருப்பி அனுப்புகின்றனர். பறவைக்காய்ச்சல் என்னும் இந்நோய் கோழிகள் வாத்துகள் போன்ற பறவைகளை பாதிக்கும் நோய் ஆகையால் தங்கள் பகுதிகளில் அதிக அளவில் பறவைகள் இறப்பது தெரிந்தால் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனைகளில் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவுரை வழங்கியுள்ளார்.