Categories
அரசியல் மாநில செய்திகள்

“நான் ரெடி! நீங்கள் ரெடியா Mr. பழனிசாமி?”… சவாலை ஏற்ற ஸ்டாலின்…!!!

உங்களுடன் நேருக்கு நேர் மோத நான் ரெடி நீங்கள் ரெடியா பழனிசாமி? என்று ஸ்டாலின் சவாலை ஏற்றுக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இந்நிலையில் ஈரோடு மாவட்ட பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க திமுக முயல்கிறது எனவும், ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கே துரோகமிழைக்கும் ஸ்டாலின், மக்களை எவ்வாறு பாதுகாப்பார்? எனவும் சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் துண்டு சீட்டு இன்றி கருத்து மோதலில் நேருக்கு நேர் மோத ஸ்டாலின் தயாரா என முதல்வர் சவால் விடுத்துள்ளார்.

இதனையடுத்து முதல்வரின் சவாலை திமுக தலைவர் ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இது பற்றி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஊழல் நாற்றம் வீசும் முதல்வர் ஈபிஎஸ் விவாதத்திற்கு சவடால் விடுகிறார். CBI விசாரணைக்கான தடையை நீக்கி, அமைச்சரவை மீதான எனது புகார்களை விசாரிக்க ஆளுநரின் அனுமதி பெற்றுவிட்டு இடம் மற்றும் நேரம் குறியுங்கள். உங்கள் ஊழல்களை தோரணம் தொங்கவிட ஒற்றை ஆளாக நான் ரெடி! நீங்கள் ரெடியா Mr. பழனிசாமி” என்று சவாலை ஏற்றுக் கொண்டார்.

Categories

Tech |