Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கள்ளக்காதலனுடன் வாழ தடையாக இருந்ததால்…” பெற்ற குழந்தையையே கொன்ற தாய்”… கண்ணீருடன் நாடகம்..!!

கள்ளக்காதலனுடன் வாழ இரட்டைகுழந்தைகள் இடையூறாக இருந்த காரணத்தினால் குழந்தையை கொன்றுவிட்டு நாடகம் ஆடுவதாக அவரது தாயார் போலீசில் புகார் அளித்தார்.

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த வள்ளி என்பவர் மகள் கீர்த்திகா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கீர்த்திகா விற்கு ஒரே பிரசவத்தில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவனுடன் கருத்து வேறுபாடு காரணமாக கீர்த்திகா தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு வந்துவிட்டார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவருக்கும், கீர்த்திகாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தை மட்டும் எடுத்துக் கொண்டு முனியப்பன் உடன் சிவகங்கை சென்று கூலி வேலை செய்து வாழ்ந்து வந்தார். நேற்று முன்தினம் கீர்த்திகா தன் குழந்தை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு இறந்து விட்டதாக கூறி சென்னையில் அடக்கம் செய்ய முடிவு செய்து கள்ளக்காதலனுடன் சென்னைக்கு வந்திருந்தார். எம்ஜிஆர் நகரில் தன் தாய் வீட்டிற்கு வந்த கீர்த்திகா குழந்தை இறந்ததை தாயிடம் கூறி அழுதார்.

தாயைப் பிரிந்து வளரும் குழந்தை நன்றாக இருக்கும் போது, இந்த குழந்தை மட்டும் எப்படி இறந்தது என்று அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. வள்ளி தன் மகள் மீதும் அவரது கள்ளக்காதலன் முனியப்பன் மீதும் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தார். இதனை அடுத்து குழந்தையை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் அவர்களிடையே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |