Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

‘கே ஜி எஃப் 2’- வை கைப்பற்றிய பிரபல மலையாள நடிகர்… டுவிட்டரில் வெளியிட்ட பதிவு…!!!

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கே ஜி எஃப் 2’ படத்தை பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் கைப்பற்றியுள்ளார் .

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘கே ஜி எஃப்’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது . இந்தப் படத்தில் ஸ்ரீநிதி செட்டி ,சஞ்சய் தத் ஆகியோர் நடித்திருந்தனர் . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வெளியாக உள்ளது . கேஜிஎப் முதல் பாகம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்ததால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எகிறியுள்ளது .

இந்நிலையில் ‘கேஜிஎப் 2’ படத்தின் கேரள வெளியீட்டு உரிமையை பிரபல மலையாள நடிகர் பிரித்விராஜ் கைப்பற்றியுள்ளார் . இதுகுறித்து நடிகர் பிருத்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கேஜிஎப் படங்களின் தீவிர ரசிகன் நான் ‌ . ராக்கியின் வரவுக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்’ என பதிவிட்டுள்ளார் . இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

Categories

Tech |