Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தடையை மீறிடாங்க… இலங்கைக்கு மஞ்சள் கடத்தல்…. 4 பேர் கைது….!!

படகில் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு விரலிமஞ்சள் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு விரலிமஞ்சள் கடத்தல் சமீப காலமாக அதிகமாக நடைபெறுகிறது. பல டன் மஞ்சள் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போதும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால் கடலோர காவல் படையினர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில் நேற்று  இலங்கை அருகே மன்னார் எனும் கடல் பகுதியில் இந்திய மீன்பிடி படகு சென்று கொண்டிருந்தது.அதனை இலங்கை கடற்படையினர் பிடித்து சோதனை செய்ததில் அப்படகில் இலங்கை பகுதியில் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள விரலிமஞ்சள் மூட்டைகள் 1,650 கிலோ இருந்தன அதனோடு கூட ஏலக்காயும்150 கிலோ இருந்தது.

படகில் 4 பேர் இருந்த நிலையில் அவர்களை பிடித்து கடற்கரையின் படையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ராஜா என்னும் தூத்துக்குடியை சேர்ந்த நபருக்கு படகு சொந்தமானது என்றும், அப்படகில் இருந்தோர் மணப்பாடை சேர்ந்த சந்தோஷ், தூத்துக்குடியை சேர்ந்த லூர்து,ரஞ்சித்குமார், பாம்பனை சேர்ந்த தர்மர் என்பதும் தெரியவந்தது அதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

Categories

Tech |