Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

விடுதி பெண் பொறுப்பாளருக்கு… தொழிலாளியால் நேர்ந்த சோகம்… திருப்பூர் அருகே பரபரப்பு….!!

குடிபோதையில் தொழிலாளி கீழே தள்ளி விட்டதில் காயமடைந்த விடுதி  பெண் பொறுப்பாளர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகரில் தனியார் தங்கும் விடுதி ஒன்று அமைந்துள்ளது. இந்த விடுதியை அப்பகுதியை சேர்ந்த ரங்கநாயகி(65) என்ற பெண் பொறுப்பாளராக  இருந்து கவனித்து வந்தார். இவ்விடுதியில் தேனி மாவட்டத்தை சேர்ந்த பால்பாண்டி(35) என்பவர் தங்கியிருந்து திருப்பூர் பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் பால்பாண்டி கடந்த  28ஆம் தேதி நள்ளிரவில் குடிபோதையில் விடுதிக்கு  வந்துள்ளார்.மேலும்  விடுதியின் கதவை திறக்கச் சொல்லி ரங்கநாயகியிடம் அவர் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் கதவை திறக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பால்பாண்டி ரங்கநாயகியை கைகளால் தாக்கி கீழே தள்ளி விட்டுள்ளார்.

இதில்  பலத்த காயம் அடைந்த ரங்கநாயகியை மீட்டு அக்கம்பக்கத்தினர் அங்குள்ள அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர்.இந்நிலையில் திடீரென்று அவரது உடல்நிலை மோசமானதால் கோயம்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு ரங்கநாயகி அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ரங்கநாயகி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பால் பாண்டியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |