பத்தாம் வகுப்பு மாணவியை கடத்திய குற்றத்திற்காக பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
திண்டுக்கல் தொட்டணம்பட்டி பகுதியை சேர்ந்த பாலுச்சாமி என்பவருடைய மகன் மதுபாலன். ஜம்புளியம்பட்டி எனும் இடத்தில் உள்ள தன் உறவினர் அஜித் குமார் வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்பொழுது அப்பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியுடன் பழக தொடங்கினார். காதலிக்கிறேன் என கூறி அச்சிறுமியை பல்வேறு இடங்களுக்கு கூட்டிச்சென்று பலாத்காரம் செய்துள்ளார். திடீரென ஒருநாள் அச்சிறுமி மாயமானதை தொடர்ந்து அவரின் பெற்றோர் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் அவ்விருவரையும் தேடினர் அப்பொழுது இருவரும் தனி அறை எடுத்து தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மதுபாலன் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சிறைபிடித்தனர். விசாரணையின்போது மதுபாலனின் சித்தி சிவரஞ்சனியும் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்தது இந்நிலையில்
அஜித் குமார் என்பவர் தலைமறைவானார் அவரை போலீசார் தேடி வருகின்றனர். சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்குப் பிறகு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.