பொங்கலுக்கு திரையரங்குகளில் விஜய் படம் ரிலீசாகுமா அல்லது சிம்பு படம் ரிலீசாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் மற்றும் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர இருப்பதால், விஜய் மற்றும் சிம்பு ஆகிய நடிகர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்,உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் 50 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனை அடுத்து 50 சதவீத இருக்கைக்கு மட்டும் அனுமதி அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தால், மாஸ்டர் படத்திற்கு முன்னுரிமை அளித்து அதை மட்டுமே வெளியிடுவோம் என்று திரையரங்கு உரிமையாளர் தெரிவித்த நிலையில், 200 தியேட்டர்களில் ஏற்கனவே முன்பதிவு செய்து உள்ளதால் நிச்சயம் பொங்கலுக்கு ஈஸ்வரன் வெளியாகும் என்று ஈஸ்வரன் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனால் விஜய் படம் வெளியாகுமா அல்லது சிம்பு படம் வெளியாகுமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.