இளம்பெண் ஒருவர் நீச்சல் உடையில் புகைப்படங்களை வெளியிட்டதால் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசிலில் வசிக்கும் இளம்பெண் Bienca Lorenco (24) இவர் தன் முன்னாள் காதலனை வெறுப்பேற்றும் விதமாக நீச்சலுடையை அணிந்திருக்கும் புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் இந்தப் புகைபடங்களின் கீழ் “நான் நீயாக இருந்திருந்தால் என்னையே நான் கண்டிப்பாக வெறுத்திருப்பேன்” என்று பதிவிட்டுள்ளார். மேலும் அந்த படம் வெளியானதையடுத்து Bienca திடீரென்று மாயமாகியுள்ளார். இதனைத்தொடர்ந்து காவல் துறையினரின் தீவிர விசாரணையில் Bienca வின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.
இதுகுறித்து அப்பெண்ணின் குடும்பத்தார் கூறுகையில், Bienca தன் காதலனை பிரிந்துள்ளதால் அவர் முன்னாள் காதலன் தான் அவரை கொலை செய்திருப்பார் என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் Bienca வின் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர். அப்போது மதுபான விடுதி ஒன்றில் அவரின் முன்னாள் காதலன் மது அருந்தி கொண்டிருந்துள்ளார். உடனே அவரிடம் சென்று Bienca எங்கே என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் நான் அவரை கொன்று விட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் Bienca வின் உடலையாவது எங்களிடம் கொடு என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனக்கு அவரை பற்றி ஒன்றுமே தெரியாது என்று கூறி கதையை மாற்றியுள்ளார். இதனால் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.