Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

இன்றைய(08-01-2021) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம்

08-01-2021, மார்கழி 24, வெள்ளிக்கிழமை, தசமி திதி இரவு 09.40 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி.

சுவாதி நட்சத்திரம் பகல் 02.12 வரை பின்பு விசாகம்.

நாள் முழுவதும் சித்தயோகம்.

நேத்திரம் – 1.

ஜீவன் – 1/2.

லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.

சுபமுகூர்த்த நாள்.

சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

இராகு காலம் – பகல் 10.30-12.00,

எம கண்டம்-  மதியம் 03.00-04.30,

குளிகன் காலை 07.30 -09.00,

சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00

இன்றைய ராசிப்பலன் –  08.01.2021

மேஷம்

உங்களின் ராசிக்கு உத்தியோகத்தில் புது உற்சாகமாக இருப்பீர்கள். வீட்டில் உள்ளவர்களிடம் ஒற்றுமை உண்டாகும். கடன் தொல்லை தீரும். மன அமைதி உண்டாகும். சுபகாரியங்களில் அனுகூல பலன் கிட்டும். உத்தியோகத்தில் போட்டி பொறாமை குறைந்து இருக்கும்.

ரிஷபம்

உங்களின் ராசிக்கு பணவரவு இருக்கும். பொன்னும் பொருளும் வாங்கும் யோகம் இருக்கும். வீட்டில் உள்ள நெருக்கடிகள் தீர்ந்து மகிழ்ச்சி இருக்கும். உத்தியோகத்தில் ஆதரவு இருக்கும். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சீராக இருக்கும்.

மிதுனம்

உங்கள் ராசிக்கு வீட்டில் மருத்துவ செலவு இருக்கும். சுபகாரியங்களில் மந்த நிலை உண்டாகும்.தொழிலில் கூட்டாளிகள் வீண் பிரச்சனையை சந்திக்க நேரிடும்.உத்யோகத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலம் மதிப்பு உயரும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

கடகம்

உங்களின் ராசிக்கு பொருளாதார ரீதியாக நெருக்கடி உண்டாகும். உடன்பிறப்புகள் உடன் கருத்து வேறுபாடு உண்டாகும். தொழிலில் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.பூர்வீக சொத்துக்களின் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

உங்களின் ராசிக்கு யோகமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் உங்கள் புகழ் செல்வாக்கு கொடி கட்டி இருக்கும்.அரசு ஊழியர்களுக்கு அவர்கள் தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வீட்டில் ஒற்றுமை அதிகரிக்கும். பணவரவுகள் சீராக இருக்கும். தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும்.

கன்னி

உங்களின் ராசிக்கு உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் இருக்கும்.வீட்டில் ஏற்படும் தேவையில்லாத செலவுகளால் பொருளாதார நெருக்கடி உண்டாகும். உத்தியோகத்தில் உள்ள மந்த நிலை மாறும்.உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது கொடுக்கும். எதிர்பாராத உதவிகள் உண்டாகும்.

துலாம்

உங்களின் ராசிக்கு குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். திடீர் பணவரவு இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும்.உத்தியோகத்தில் தொழில் புரிவோருக்கு வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன் கிடைக்கும். தொழிலில் பணி சுமை நீங்கும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு எந்த ஒரு செயலையும் செய்வதற்கு கடினமாக உழைக்க வேண்டி இருக்கும்.உத்தியோகத்தில் எதிர்பாராத லாபம் கிடைப்பது இடையூறு உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு இருக்கும். நண்பர்களின் உதவியால் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.

தனுசு

உங்களின் ராசிக்கு திடீர் தனவரவு இருக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழிலில் செய்யும் செயலில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் புதிய கூட்டாளி சேர்க்கையால் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

உங்களின் ராசிக்கு உறவினர் வழியில் அனுகூலம் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனை பிரச்சனைக்கு நல்ல தீர்வு கொடுக்கும். புதிய வேலை வாய்ப்பு உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் கூடும்.

கும்பம்

உங்களின் ராசிக்கு அலுவலகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் அனுகூலம் கிட்டும். எதிர்பாராத உதவி கிடைக்க தாமதம் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை தரும்.புதிய வீதியில் வெளிவட்டார நட்பு கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும்.

மீனம்

உங்களின் ராசிக்கு தேவையில்லாத டென்ஷன் உண்டாகும்.சந்திராஷ்டமம் உங்கள் ராசியில் இருப்பதால் எதிலும் நிம்மதி இல்லாத நிலை இருக்கும்.வெளியில் இருந்து வரவேண்டிய தொகைகள் கிடைப்பதில் காலதாமதம் இருக்கும். எந்த ஒரு செயலிலும் நிதானம் வேண்டும்.

Categories

Tech |